கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்
1.
முணுமுணுக்காமல் வாதாடாமல்
அனைத்தயும் செய்து நாம் முன்னேறுவோம் – கோணலும்
2.
ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் – கோணலும்
3.
இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே _ அவர்
இருப்பதுபோல அவரைக் காண்போம் – கோணலும்
4.
அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் – கோணலும்
5.
வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே – கோணலும்
6.
பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம் – கோணலும்